சனி, நவம்பர் 26, 2011

அன்னிய முதலீட்டில் அழிபடபோகும் சில்லறை வர்த்தகம். அதிர்ச்சி ரிப்போர்ட். - எஸ். குருமூர்த்தி

"வருகிறது வால்மார்ட்"





       ப்போது வருகிறது, அப்போது வருகிறது என்று "புலிவருது புலி' பாணியில் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருந்த சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வந்தேவிட்டது. இந்தியச் சில்லறை வர்த்தகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டுக்குக் கதவைத் திறந்தாகிவிட்டது.

 கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு மேலும் சரிவு, அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைவு, அன்னிய நிறுவனத் தொழில் முதலீட்டாளர்களின் முதலீடுகள் இந்தியாவிலிருந்து மீண்டும் வெளியேற ஆரம்பித்தது ஆகியப் பொருளாதார நிகழ்வுகளால் என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் இந்திய அரசால் சரிந்து கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பையோ விலைவாசி உயர்வையோ கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொருளாதார சீர்திருத்தத்தில் அடுத்த கட்டம் என்ற பெயரில் அன்னிய பெருவர்த்தகர்களுக்கு இந்தியச் சந்தையில் புகுந்து விளையாடக் கதவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது அரசு.

 உள்நாட்டுப் பெருந்தொழில் நிறுவனங்களும் அயல் நாடுகளின் தொழில் நிறுவனங்களும் கடந்த சில ஆண்டுகளாக இடையறாமல் தூபம் போட்டு வந்த ""மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்த'' நடவடிக்கைக்கு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது. இந்த சீர்திருத்தத்துக்காக ""பாடுபட்ட சக்திகள்'' வென்றுவிட்டன. ஆனால், ""இந்தியா'' தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை.

 பெருநகரங்களின் நலன்தான் இந்த அரசின் முக்கிய குறிக்கோள் என்பதை இந்த நடவடிக்கையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

 இந்திய கிராமப்புறங்கள் குறித்தும் வேளாண்மை குறித்தும் இந்த அரசுக்குப் போதிய அறிவோ, அக்கறையோ இல்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.

 சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவால், இந்த வியாபாரத்தில் நாடு முழுவதும் ஈடுபட்டு வரும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதே சமயம் கிராமப்புற இந்தியாவில் இப்போது கிடைத்துவரும் உணவுப் பாதுகாப்பையும் இது சேர்த்தே அழித்துவிடும் என்பது பெரும்பாலானவர்களுக்கு இன்னும் தெரியாமலேயே இருக்கிறது.

 இந்திய சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிராமங்களுக்கே சென்று நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அவர்களுக்கு நியாயவிலை கிடைக்க உதவும் என்பது முதல் வாதம். இதன் மூலம் விவசாயிகள் பணக்காரர்களாகிவிடுவார்கள் என்பது அரசு மற்றும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்காகக் குரல் எழுப்புபவர்களின் இன்னொரு வாதம். இப்படிச் சொல்கிறவர்கள் இந்தியாவின் கிராமப்புறங்களைப் பற்றிய புரிதல் இல்லாதவர்கள் என்பதுதான் நிஜம்.

 பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12) வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்தவும், அடித்தளக் கட்டமைப்பை உருவாக்கவும், உள்நாட்டு - வெளிநாட்டு வர்த்தகத்தைப் பெருக்கவும் தேவைப்படும் கொள்கைகளை வகுப்பதற்கான மத்திய திட்டக்குழுவின் செயல்திட்டக் குழு நாடாளுமன்றத்துக்கு அறிக்கை தயாரித்து அளித்தது.

 அதேசமயம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் ஆகியவற்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவும் அரசுக்கு அறிக்கை அளித்தது. இவ்விரு அறிக்கைகளையும் சேர்த்துப் படித்தால் கிராமப்புற இந்தியா எப்படி இருக்கிறது என்ற உண்மை புலப்படும்.

 இந்தியாவில் உள்ள விவசாயப் பண்ணைகளையும் வெளிநாடுகளில் உள்ள பண்ணைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை நிலவரம் புரியும்.

 இந்தியாவில் சுமார் 588 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் உள்ளன. அதாவது 32 கோடிக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தியாவில் நிலங்களை நம்பி நேரடியாக வாழ்கின்றனர். சராசரியாக அவர்கள் வைத்திருக்கும் நிலத்தின் அளவு 5 ஸ்டாண்டர்டு ஏக்கர் அல்லது அதற்கும் கீழே.

 வெளிநாடுகளின் நிலைமை அதுவல்ல. கனடா நாட்டில் சராசரியாக ஒரு விவசாயி வைத்திருப்பது 1,798 ஏக்கர். அமெரிக்காவில் இது 1,089 ஏக்கர், ஆஸ்திரேலியாவில் 17,975 ஏக்கர், பிரான்சில் 274 ஏக்கர், பிரிட்டனில் 432 ஏக்கர்.

 அமெரிக்க விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவு, இந்திய விவசாயி வைத்திருக்கும் நிலத்தின் அளவைப் போல 250 மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவிலோ இது 4,000 மடங்கு அதிகம்! எனவே அமெரிக்காவிலும் இதர மேற்கத்திய நாடுகளிலும் பண்ணை வீட்டிலிருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கிப்போகும் ""கொள்முதல் பாணி'' இந்தியாவுக்கு ஒத்துவராது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

 இந்தியாவில் கிராமங்களில் விளையும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை எப்படி சந்தைக்கு வருகின்றன, எப்படி கிராமங்களிலேயே வாங்கி உண்ணப்படுகின்றன என்பது தெரியாமல், இந்தியாவில் மேலைநாட்டுக் கொள்முதல் பாணியை அறிமுகப்படுத்த நினைக்கிறார்கள்.

 வால்மார்ட் போன்ற சூப்பர்மார்க்கெட் நிறுவனங்களை அனுமதித்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற வாதம் சரியானதல்ல; இடைத் தரகர்கள் மட்டும் அல்ல, சிறு விவசாயிகளும் சேர்த்தே ஒழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதுதான் உண்மை. அது மட்டும் அல்ல, வேறு எதையெல்லாம் அந்தக் "கொள்முதல் பாணி' ஒழிக்கும் என்பதைச் சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்.

 விவசாய வேலைகள் அனைத்துமே ஒப்பந்த அடிப்படையில் இனி மேற்கொள்ளப்படும். மிகப்பெரிய நிறுவனம்தான் ஆள்களை வேலைக்கு வைத்துக்கொள்ளும் அல்லது நீக்கும். பெரிய நிலப்பரப்பாக நிலங்கள் இணைக்கப்பட்டு இயந்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும். பாரம்பரிய விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.

 நிலங்களை அதிக பரப்பளவில் வைத்திருப்பவர்களால்தான் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகமாக வழங்க முடியும் என்பது உலக அளவிலான ஆய்வுகளின் முடிவு. ஆனால் இந்தியாவில் அதுவே தலைகீழாக இருக்கிறது.

 மொத்த சாகுபடிப் பரப்பில் 34% நிலத்தை சிறு, குறு விவசாயிகள்தான் பயிர் செய்கின்றனர். ஆனால், நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இவர்களுடைய பங்களிப்பு 41% ஆக இருக்கிறது. அவர்களுடைய உற்பத்தித்திறன் மற்றவர்களைவிட 33% அதிகமாக இருக்கிறது.

 சிறு நிலங்களையெல்லாம் சேர்த்து பெரு நிலப்பரப்புகளாகவும் பெரும் பண்ணைகளாகவும் மாற்றினால் உடனடியாக தேசிய உணவு உற்பத்தியில் 7% குறைந்துவிடும்! உணவு தானியம் மட்டும் அல்ல பால் உற்பத்தியும் அடியோடு பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் கிடைக்கும் 1,009 லட்சம் டன் பாலில் பெரும்பகுதிக்கு சிறு, குறு விவசாயிகள்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

 கிராமப்புறங்களில் உள்ள மக்கள்தொகையில் பாதியைக் குறைக்காமல் சிறு, குறு விவசாயத்தை ஒழித்துவிட முடியாது. திட்டக்குழு நியமித்த செயல்திட்டக் குழு தனது அறிக்கையின் இறுதியில் இவ்வாறு தெரிவிக்கிறது: ""சிறு, குறு விவசாயிகள் இந்தியாவில் இன்னும் நெடுங்காலத்துக்கு இருக்கப் போவது நிச்சயம் - அதே சமயம் அவர்கள் ஏராளமான சோதனைகளை (அரசின் முடிவுகளால்தான்) சந்திக்கப் போவதும் நிச்சயம்; எனவே சிறு, குறு விவசாயிகளுக்கு என்ன நேரப் போகிறதோ அதைப் பொருத்துத்தான் கிராமப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் அமையும்''.

 இதைவிட முக்கியம், சிறு - குறு விவசாயிகள் எதை உற்பத்தி செய்கிறார்கள், எதை உண்கிறார்கள், எதை மற்ற விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்பது. சிறு, குறு விவசாயிகளிடம் வியாபாரிகளுக்கு விற்பதற்காக உபரி உற்பத்தி ஏதும் இல்லை. இந்த நிலையில், வால்மார்ட் வகையறாக்கள் கிராமங்களில் நுழைந்தால், அவர்களுடைய உணவுப் பாதுகாப்பே பாதிக்கப்பட்டு விடும்.

 கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால், இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60%-க்கும் மேல் வியாபார ரீதியாக சந்தைக்கு வருவதில்லை, அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பது. சிறு விவசாயிகள் இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். தங்களுடைய நுகர்வுக்காகவும் தங்களிடம் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலிக்குப் பதில் கொடுப்பதற்காகவும்தான் இதை இப்படிப் பாதுகாக்கிறார்கள்.

 இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விவசாயிகளின் உற்ற நண்பர்களான கால்நடைகளுக்கும் கூட உணவாகப் பயன்படுகிறது. மிகவும் அவசியப்படும் நேரத்தில் கிராமத்தில் பிறருக்கும் விற்கப்படுகிறது.

 இந்த 60 சதவீதத்தில் ஒரு சிறு பகுதியையாவது வால்மார்ட் நிறுவனம் கொள்முதல் செய்கிறது என்று வைத்துக் கொண்டாலும்கூட, ""நகர்ப்புற விலை நிர்ணயம்'' கிராமங்களிலும் நுழைகிறது என்று பொருள்.

 நகரில் விற்கும் விலைக்கு கிராமங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகளும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் வாங்கிச் சாப்பிட முடியுமா?

 அப்படியொரு நிலை வந்தால் கொங்கணப் பிரதேசத்தில் பரவலாக விளையும் அல்போன்சா ரக மாம்பழங்களுக்கு ஏற்பட்ட நிலையும் கேரளத்தில் மீன்களுக்கு ஏற்பட்ட நிலையும்தான் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும்.

 இப்போதெல்லாம், அல்போன்சா ரக மாம்பழங்களைக் கண்ணால்தான் கொங்கணப் பகுதி மக்கள் பார்க்கின்றனரே தவிர சாப்பிடுவதில்லை. ஏற்றுமதிக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டு கிடைக்கும் ரூபாயில் நகர்ப்புறங்களிலிருந்து தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்கின்றனர்.

 கேரள மீனவர்கள் மீன்களை அதிக விலைக்கு ஏற்றுமதி செய்துவிட்டு கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டு மதுரகங்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். காரணம், சொந்த ஊரில் யாருக்கும் அந்த மீன் மலிவு விலையில் கிடைப்பதில்லை.

 சில்லறை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு என்பது சிறு, குறு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பை இப்படித்தான் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரு மடங்கு என்று கருதப்படும் விவசாயத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் விளைவிக்கும் பொருள்களே கிடைக்காத நிலையும் அதிக விலை கொடுத்துத்தான் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்க வேண்டும் என்ற நிலையும் ஏற்படும்!

 இது ஒருபுறம் இருக்க எஞ்சிய 40% உணவு தானியங்கள் எப்படி கிராமங்களிலும் பிற பகுதிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன? எஞ்சியுள்ள 40% உணவு தானியங்களில் சுமார் 35% அளவு, அதாவது பத்து டன்களில் 9 டன் அளவுக்கு தினசரி, வார கிராமச் சந்தைகள், திருவிழாச் சந்தைகள் மூலம்தான் விற்கப்படுகின்றன.

 கிராமங்களில் நடைபெறும் சந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 47,000. எஞ்சிய 5% உணவு தானியங்கள் மட்டுமே அரசின் கண்காணிப்பில் செயல்படும் 6,359 மொத்தவிலை மண்டிகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.

 இந்த இடத்தில்தான் நாட்டின் உபரி உணவு தானிய உற்பத்தி நவீனச் சந்தை அமைப்பு மூலம் விற்கப்படுகிறது. இந்த உணவு தானியத்தைத்தான் அரசு பொது விநியோகத்துக்காக வாங்கி, பத்திரப்படுத்துகிறது. மொத்த விளைச்சலில் எந்த அளவுக்கு பொதுச் சந்தைக்கு வருகிறது என்று பாருங்கள்.

 வார, தினச் சந்தைகள் எப்படிச் செயல்படுகின்றன? முக்கால்வாசிச் சந்தைகள் வாரத்தில் ஒரு முறை கூடுகின்றன. ஐந்தில் ஒரு பகுதி வாரத்தில் இருமுறை கூடுகின்றன. இருபதில் ஒரு மடங்கு தினசரி கூடுகின்றன.

 ஒரு சந்தை, சுமார் 14 கிராமங்களுக்குப் பொருள்களை விற்கிறது. எல்லாச் சந்தைகளும் சேர்ந்து 6.58 லட்சம் இந்தியக் கிராமங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்களையும் இதர வேளாண் பொருள்களையும் விற்கின்றன.

 மூன்றில் இரு மடங்கு சந்தைகள் கிராமங்களிலிருந்து அதிகபட்சம் 16 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கின்றன. நாலில் ஒரு பகுதி சந்தைகள் 6 கிலோ மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நடைபெறுகின்றன. பத்தில் ஒரு பகுதி சந்தைகள் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடக்கின்றன.

 மூன்றில் இரு மடங்குக்கும் மேற்பட்ட மக்கள், சந்தைகளுக்கு நடந்து சென்றே பொருள்களை வாங்குகின்றனர். மூன்றில் ஒரு பங்கு மக்கள் சைக்கிளில் சென்று வாங்குகின்றனர். மற்றவர்கள் மாட்டு வண்டிகளிலும், மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களிலும் வந்து வாங்குகின்றனர்.

 இந்த சந்தைகளுக்கு வரும் மக்கள் வெறும் சரக்குகளை வாங்கிப் போக மட்டும் வருவதில்லை. சமூக, கலாசார பரிவர்த்தனைகளுக்காகவும் வருகின்றனர்.

 இங்குதான் கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள் பேசித்தீர்க்கப்படுகின்றன. வாய்க்கால் வரப்பு தகராறுகளும் சுமுகமாக முடிகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் இங்கேயே வரன் பார்ப்பதும் உண்டு. வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களையும் இங்கேயே பேசி முடிக்கின்றனர்.

 கால்நடைகளை வாங்குவது விற்பது, அவற்றுக்குத்தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை வாங்குவது போன்றவற்றுக்கும், உழவுக்கருவிகள் வாங்கவும் இந்த சந்தைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.

 பாத்திரங்களுக்குக் கலாய் பூசுவது, விவசாயக் கருவிகளைப் பழுதுபார்ப்பது, கைப்பிடி போடுவது, சாணை பிடிப்பது என்று எல்லாமே இந்தச் சந்தைகளில்தான்.

 அடுத்து என்ன பயிர்ச் சாகுபடி செய்யலாம், அதற்குத் தேவைப்படும் பணத்துக்கு என்ன செய்யலாம் என்றுகூட இங்குதான் பேசி முடிவு செய்கின்றனர்.

 விவசாயிகள் அடுத்து என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று தங்கள் அலுவலகங்களுக்கு வந்து கேட்க வேண்டும் என்று கூறாமல் அரசே இந்த சந்தைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று திட்டக் கமிஷனின் செயல்திட்டக்குழு பரிந்துரை செய்துள்ளது.

 திட்டக்கமிஷனின் செயல்திட்டக்குழு தங்களைப் போகச் சொன்ன இடத்துக்கு, வால்மார்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது இந்திய அரசு.

 கிராமப்புற இந்தியா, மத்திய அரசிடமிருந்து அந்த அளவுக்கு அன்னியப்பட்டுப் போயிருக்கிறது. அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ன என்று நாட்டின் விவசாயிகளில் 70 சதவீதம் பேர் இன்னமும் கேள்விப்பட்டதுகூட இல்லை என்று தேசிய சாம்பிள் சர்வே (என்.எஸ்.எஸ்.) அமைப்பு தெரிவிக்கிறது.

 அப்படி அதைக் கேள்விப்பட்ட 30 சதவீதம் பேரிலும் 81 சதவீதம் பேருக்கு அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லையாம். காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அரசு நடத்தும் கொள்முதல் நிலையங்களில்தான் அமலில் இருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு நன்கு பரிச்சயமான சந்தைகளில் அல்ல.

 எனவேதான், குறைந்தபட்ச ஆதரவு விலை என்றாலே என்னவென்று தெரியாத விவசாயிகள், எதிர்கால சந்தையை எப்படித் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு சரியாகவே கேட்டிருக்கிறது.

 இதற்குப் பதில் சொல்ல முடியாத அரசு, உணவு தானியத்தில் ""எதிர்காலத்துக்கான ஊக பேரம் கூடாது'' என்று மட்டும் தடை செய்திருக்கிறது, அவ்வளவே. அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது நமது மத்திய ஆட்சியாளர்களின் இந்திய கிராமங்கள் பற்றிய நுண்ணறிவு. என்ன செய்வது மண்ணின் மணம் தெரியாமல் ஹார்வேர்ட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் படித்துவிட்டு வந்த பொருளாதார நிபுணர்களின் திட்டமிடலின் லட்சணம் அப்படி.

 பின்குறிப்பு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவால் பாரம்பரியமாக சமுதாய மக்களால் நடத்தப்படும் 12 லட்சம் சில்லறைக் கடைகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கிறது மத்திய அரசு; அது மட்டும் அல்ல, கிராமப்புற உணவுப் பாதுகாப்பு வளையத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது. 2012-ம் ஆண்டு தொடங்கி எதிர்வரும் காலத்துக்கு ஐக்கிய முன்னணி அரசு இந்த நாட்டுக்கு அளித்திருக்கும் கொடை இதுதான்!

நன்றி: தினமணி.


புதன், நவம்பர் 23, 2011

சென்னைக்கு அழகு சேர்க்கபோகும் மெட்ரோ ரயில். படங்கள் இணைப்பு.

 எம்எம்டிஏ சிக்னல் அருகில்                                                                                                                               




                 சென்னையில் திரும்பிய திசையெல்லாம்  போக்குவரத்து நெரிசல் முழி பிதுங்கி கிடக்கிறது.  நகரின் அனைத்து பாகங்களிலும் பெரிய பெரிய தூண்களும், டைனோசர் சைசுக்கு இருக்கும் கிரேன்களும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று நம்மை பயமூட்டுகின்றன. மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நகரின் அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதால் சென்னை முழுவதுமே போக்குவரத்து ஆமை வேகத்தில்தான் நடந்து வருகிறது. 

பொறுமைசா
லிகளான   சென்னை வாசிகள், இன்றைய  சிரமம் நாளைய வசதிக்காக என்று இந்த சிரமத்தை பொறுத்துக் கொண்டு உள்ளனர்.

சென்னையின் நாளைய அடையாளமாய் மாறப்போகும் மெட்ரோ ரயில் திட்டப்  பணிகளைப் பற்றிய நான் எடுத்த  புகைபடங்களும் சில விபரத் துளிகளும்.....

  பிரமாண்டமான தூண்கள்!


இணைப்புக் கிராதி


இணைப்புக் கிராதி

    
    இனி கோயம்பேடு பேருந்து நிலையதிற்குள்ளேயே...  ரயில் வரும்!
  • சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முந்தையை திமுக அரசு கொண்டு வந்ததுதான் இந்த மெட்ரோ ரயில் திட்டம். 

  • சுமார்  ரூ.14,600 கோடி இந்த மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

  • துணை முதல்வர் ஸ்டாலின் இத் திட்டத்தை துவக்கி வைத்தார்.

  • இத்திட்டம் 2014ம் ஆண்டில் முடிவடைந்து ரயில் ஓடத் துவங்கும்.

  • இதற்கான முயற்சிகள் 2006ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டன.

  • 2006 ஜூன் மாதத்தில் தமிழக அமைச்சரவை இந்த தி்ட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

நீண்டு செல்கிறது பாலம்
  • இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.14,600 கோடி. இதில் 41 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கும். மீதித் தொகையை ஜப்பான் அரசு    ( Japan International Cooperation Agency (JICA)) கடனாக வழங்குகிறது.
-படங்களும் செய்திகளும் தொடரும்.

ஞாயிறு, நவம்பர் 13, 2011

ஃபாத்திமா பாபு எழுதிய (அந்தமாதிரி) கவிதை?



இது நாள் வரையில் ஃபாத்திமா பாபுவை எல்லோருக்கும் செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகை என்றுதான் தெரியும்.  அவர்  கவிதை எழுதத் தெரிந்த ஓவியம் வரையத் தெரிந்த பன்முகத் திறன் படைத்தவர் என்பது நம்மில் அனேகம் பேருக்குத் தெரியாது.

 அவர் எழுதிய கவிதை ஒன்றை அவரது முக நூலில் வெளியீட்டிருந்தார்.எந்த மாதம் என்று நினைவில்லை. கவிதையை படித்ததும் அப்படியே பிரமித்துவிட்டேன். நல்ல வார்த்தை வார்ப்புகள்.

இதைபோன்ற கவிதைகளை எழுத நிறைய துணிச்சல் வேண்டும். அது அவரிடம் நிறையவே இருக்கிறது. வாழ்த்துகள் ஃபாத்திமா பாபு.  


 "இயங்கிக் களைத்த போது.....!"


முலைகளில் படரும் கரங்களின்

காட்டம் பொறுத்து

காதுகளில் வெடிக்கும் முத்தத்தின்

சப்தம் சகித்து

உதடுகளில் பதியும் பற்களின்

ரணம் பொறுத்து

ஈரமாகும் முன் இறுகிப் பாயும்

குறியின் வலி பொறுத்து.....

இயங்கிக் களைத்த அவன்

கழுவி வெளிவரும் முன்

கசிவுகளின்  பிசுபிசுப்பினூடே

விரல்களின் விரைந்த இயக்கத்தில்

துரித பயணம் ஒன்று - .....

மிச்சமான உச்சம் நோக்கி.

   - ஃபாத்திமா பாபு .       
                                                                                                  



பின் குறிப்பு: 

பாத்திமா பாபு அவர்களின் அனுமதியின்றி இக் கவிதையை பிரசுரித்திருக்கின்றேன்.  ஃபாத்திமா பாபு  அவர்களுக்கு எனது நன்றிகள் பல.....! 



தி ஹிண்டுவை வம்பிக்கிழுக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விளம்பரம்.






 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியீட்ட  விளம்பரம் 'தி இந்து' நாளிதழை பகிரங்கமாக சண்டைக்கு இழுத்துள்ளது. 

சமீப காலமாக தமிழ் நாட்டில்  ஆங்கில பத்திரிகைகளிடையே 'யார் பெரியவன்' என்ற போட்டி கடுமையாக எழுந்துள்ளது.

அது நாள் வரையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி ஹிண்டு ஆங்கில நாளிதழ்கள் மட்டுமே தமிழ் நாட்டில்  கோலோச்சிவந்தன.  2005ம் ஆண்டு டெக்கான் கிரானிக்கலும்,  2008ம் ஆண்டு ஏப்ரல் தமிழ் வருடப் பிறப்பு அன்று 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவும்' சென்னையில் தொடங்கப்பட்டன.  அன்றிலிருந்து சென்னை பத்திரிகை உலகில் பரப்பரப்புத் தொற்றிக் கொண்டது.


சென்னையோடு மும்பையை ஒப்பிடும் போது, மும்பையில் நாளிதழ்கள் அதிகம். ஆனால் சென்னையில் அப்படி அல்ல. இங்கு ஆங்கில காலை நாளிதழ்கள் நான்கும்,  தமிழில் காலை நாளிதழ்கள் நான்கும், மொத்தம் 8 நாளிதழ்கள் மட்டுமே முக்கிய இடத்தில் உள்ளன.  சென்னையிலிருந்து இருந்து வெளியாகும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி இந்து நாளிதழ்கள் தமிழர் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டே செய்திகளை வழங்கி வருகின்றன.


நகரின் பல பாகங்களில் ஐடி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, கடந்த 10 வருடத்தில் சென்னை பல்வேறு துறைகளில் வியப்புக்குறிய வகையில் முன்னேறி வருகிறது.  ஆங்கில கலாச்சாரத்தின் தாக்கம், தமிழக மண்ணில் அதி விரைவாக பரவிவருகிறது. இதன் அளப்பரிய வியாபார வாய்ப்பு சென்னையின் கதவுகளை சர்வதேச அளவில் திறந்துவிட்டுள்ளது.

இந்த காலக் கட்டத்தில் சென்னையில் காலுன்றிய தி டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்கள்,  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி இந்துவை ஓரங்கட்டிவிடலாம் என்று எளிதாக கணக்கு போட்டன,   அவைகளுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்தவுடன் நமக்கும் அப்படித்தான் தோன்றியது.

தி டெக்கான் கிரானிகல் சொல்லிக் கொள்ளும் அளவில் விற்பனை ஆனாலும், அதன் விளம்பர வாய்ப்புகள் அப்படி ஒன்றும் பெரிதாக  இல்லை.

ஆனால் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிலையோ வேறு. இந்தியா முழுவதும் பலமான நெட்வொர்க் உள்ள அந்த பத்திரிகை யாரையும் எதையும் வலைக்கும் ஆற்றல் படைத்தது. விளம்பரம் மற்றும் விற்பனைக்காக எந்த ஒரு நிலைக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளக் கூடியது.

 எக்ஸ்பிரஸ் மற்றும் இந்து நாளிதழ்கள் நினைத்துப் பார்க்காத பரீச்சார்த்திரமான முயற்சிகளை கையாள்வதில் டைம்ஸ் எப்போதுமே முன்னனியில் இருக்கிறது. சென்னையில் லான்ச் ஆனபோதே தமிழில் விளம்பரம் வெளியீட்டு ஆங்கில பத்திரிகைக்கு தமிழில் விளம்பரமா? என்று புருவம் உயரச்செய்தது.

இன் நிலையில் இந்த (நவம்பர்)  மாதத் தொடக்கத்தில் டைம்ஸ் வெளியீட்ட விளம்பரம், பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஒரு ஆள் வேஷ்ட்டி  சட்டை அணிந்துக் கொண்டு, கையில் ஒரு நாளிதழை வைத்துக் கொண்டு பார்க்கும் இடத்தில் எல்லாம் தூங்கிக்கொண்டு இருக்கிறான்.
    
ஒரு கட்டிடத் திறப்பு விழாவின் போது, விருந்தினர் ரிப்பன் வெட்ட, அருகில் தூங்கிக் கொண்டு இருக்கிறான். விளம்பரத்தைக் காண இங்கே சொடுக்கவும்

பளுதூக்கும் வீரர்கள் இருக்கும் சபையில் தூங்கிக்கொண்டு இருப்பான்.

மக்கள் லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருக்கும் போது அங்கு அமர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறான்.

காவல் துறை அணிவகுப்பின் போதும்...ஓட்டு சேகரிக்கும்  போதும்.... என்று பார்க்கும் இடத்தில் எல்லாம் அவனது தூக்கம் தொடர்கிறது.

இந்த விளம்பரங்கள் ஓடும் போது பின்னணியில் ஒரு பெண் குரல் கிழ்கண்டவாறு பாடுகிறது.

ஏ....ஆராரோ ஆரிரரோ......
எங்கண்ணே  ஆராரோ ஆரிரரோ......
குறிஞ்சி மலைத்தேனே கொண்டாடும் சந்தனமே.....
சரிஞ்சி படுத்திருக்கும் சென்பகமே கண் உறங்கு.  (ஆஆ....)
நிலவே தூங்கும் வேள...நீயேன்
தூங்கவில்லை
நிலவே தூங்கும் வேள...நீயேன்
தூங்கவில்லை
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு.....   (ஆஆ.....)
ஆற்றங்கரை காற்றினிலே அன்பே கண் உறங்கு


பின்பு இறுதியில்

STUCK WITH NEWS 

THAT PUTS YOU 

TO SLEEP? 

என்ற வாசகத்தோடு அந்த விளம்பரம் முடிகிறது.


இதில் எங்கே பிரச்சனை இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்?.  அந்த தூங்கும் மனிதன் தனது கையில் தி இந்து நாளிதழைதான்  மடித்து  வைத்திருக்கிறான், என்பது கடைசி காட்சியில் மிகத் தெளிவாக தெரிகிறது.  

'சவ சவன்னு தூக்கம் வரவழைக்கும் செய்திகளைத் தரும் இந்து நாளிதழ்,  இனி ஒரேடியாகத் தூங்கட்டும்' என்ற பொருள் வரும்படி, அந்த விளம்பரம் உள்ளதாக விளம்பர நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறனர். 

இதற்கு இந்துவின் பதில் என்ன....?





வியாழன், நவம்பர் 10, 2011

பப்பாசி புதிய நிர்வாகிகள் தேர்வு.




பப்பாசி புதிய நிர்வாகிகள்



தென்னிந்தியாவிலேயே மிகப்பெரியப் பதிப்பாளர்கள் சங்கமும், கடந்த
37  ஆண்டுகளுக்கும் மேலாக 'சென்னை புத்தகக் காட்சியை' வெற்றிகரமாக நடத்திவரும் சங்கமுமான 'தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள்
 மற்றும் பதிப்பாளர்கள் (BAPASI ) சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம் சென்னையில் நேற்று (புதன் அன்று) நடைபெற்றது.

இதில் பபாசியின் தலைவராக ஆர்.எஸ்.சண்முகம் (செண்பகா பதிப்பகம்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.  துணைத்  தலைவர்களாக  ராமலட்சுமணன் (உமா பதிப்பகம்) மற்றும் எம். சுப்பிரமணியன்  (டைகர் புக்ஸ்),   செயலாளராக எஸ்.வைரவன் (குமரன் பதிப்பகம்),
 துணை செயலாளர் ஏ.ஆர்.சிவராமன் (ஜெய்கோ), பொருளாளராக ஏ.ஆர். வெங்கடாசலம் (அறிவாலயம்).

செயற்குழு உறுப்பினர்களாக (தமிழ்)....

க.நாகராஜன் (பாரதி புத்தகலாயம்), எஸ்.கே. முருகன் (நாதம் கீதம்), பி.மயிலவேலன் (வனிதா பதிப்பகம்), எஸ். சுரேஷ் குமார் ( நக்கீரன் பதிப்பகம்),.

ஆங்கிலத்திற்கு....

எஸ்.பி.அசோக்குமார் (மெட்ராஸ் புக் ஹவுஸ்), டி.எஸ்.ஸ்ரீநிவாசன் (கிரி ட்ரேடிங்), ஆர்.மாசிலாமணி (ராம்கா புக்ஸ்), எம். சாதிக் பாட்ஷா (பார்வேர்ட் மார்க்கெட்டிங் ஏஜென்சி).

நிரந்தர புத்தகக்காட்சி குழுவிற்கு....

குழ.கதிரேசன் (ஐந்திணை பதிப்பகம்), எஸ்.டி.மெய்யப்பன் (மதிநிலையம்), எஸ்.தீபக் குமார் (ராஜலெட்சுமி பதிப்பகம்), நந்த கிஷோர் (டெக்னோ புக் ஹவுஸ்) 
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   

     

கவிதா பதிப்பகத்தின் தலைவரும் கணையாழியின் வெளியீட்டாளருமான சேது.சொக்கலிங்கம் முந்தைய பப்பாசி தலைவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

திங்கள், நவம்பர் 07, 2011

'ஊசி'ப்போன கதை!



தொடர்ந்து அரசியல் பற்றி எழுதியது கொஞ்சம் போர் அடித்துவிட்டது.

கொஞ்சம் ரிலாக்ஸ்டாக  ஒரு கதை எழுதலாம் என்று நினைத்த நேரத்தில், எங்க அத்தான் ஒரு கதை சொன்னார். காவல்துறையில் துணை கண்காணிப்பாளராக  இருக்கும் அவருக்கு நகைச்சுவை அத்துபடி.

 

ந்த முனிவர் தனது சிஷ்யக்கோடிகளைக் கூப்பீட்டு  துணி தைப்பதற்கு  ஒரு ஊசி வாங்கிவரசொன்னார்.

அந்த பத்து சீடர்களும் சந்தைக்குச் சென்று ஊசி வாங்கினார்கள். ஊசியை வாங்கியபோது ஒரு பிரச்சனை.

ஊசியை யார் எடுத்து வருவது என்று அவர்களுக்குள் வாத பிரதிவாதங்கள் மூண்டது.  " நீ எடுத்து வா... இல்ல அவன் எடுத்துவரட்டும்"  என்று ஆளாளுக்கு தங்களுக்குள் வாதிட்டுக் கொண்டார்கள்.

யாரும் ஒருவருக்கொருவர் விட்டுக்  கொடுக்கவில்லை.  சண்டயும் விட்டப்பாடில்லை.  அந்த பத்து சீடர்களும் தங்களுக்குள் பேசி முடிவெடுத்துக் கொண்டனர்.

பின்னர் ஒரு பெரிய பனை மரத்தை வாங்கி, அந்த ஊசியை அதில் சொருகி, அந்த பத்து சீடர்களும் பனை மரத்தை தூக்கிச் சென்றனர்.   

இது எப்படி இருக்கு....?!

கதை: பரமார்த்தரும் பத்து சீடர்களும்.  


 oOo



வெள்ளி, நவம்பர் 04, 2011

ஆறு அமைச்சர்களை நீக்கி, நூலக இடமாற்ற பிரச்சனையை திசை திருப்பிய ஜெயலலிதா.

  

ஜெயலலிதா


ந்தியாவில் ஊடகங்களின் ஆட்சி நடை பெறுகிறது என்றார் கலைஞர். 
அதை நன்கு உணர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. ஒரு கோட்டை அழிக்காமல் சின்னதாக்கும் பழைய தந்திர கோட்பாட்டை இங்கு பயன்படுத்திருக்கிறார். 

அண்ணா நூலக மாற்றத்திருக்கெதிராக  டிவியிலும் பத்திரிகையிலும் இனையத் தளத்திலும் மக்களின்  எதிர்ப்பால் நேற்று தமிழகமே சற்று பதற்றமாகத்தான் இருந்தது.  பல்வேறு அரசியல் தலைவர்கள் முதற்கொண்டு பேஸ் புக், ட்வீட்டர் வரை  நேற்று ஜெயலலிதா கடும் கண்டனத்திற்கு உள்ளானர்.  கடந்த 6-7 மாதத்தில் புதிய சட்டசபை மாற்றம், செம்மொழி நூலகம் மற்றும் அண்ணா நூலக  இடமாற்றம் என்று மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார்.

 நூலக மாற்றத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட பொது நல வழக்கில்,  நீதி மன்றம் இன்று இடைக் கால தடையை விதித்து,  ஜெயலலிதாவின் தலையில் குட்டியிருக்கிறது.  இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தை குறைக்க என்னிய ஜெயலலிதா, அதிரடி உத்திரவாக தனது ஆறு அமைச்சர்களை நீக்கி, முந்தைய செய்தியினை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளார்.  

நீதிமன்றத்தால் நடத்தப்படுகிறதா  தமிழக அரசு?

இல்லை என்றால் நாளை வரும் அனைத்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நீதிமன்ற தடையுத்திரவுதான் முதல் பக்கத்தில் அல்லது முதல் இடத்தில்  வந்திருக்கும். ஆறு அமைச்சர்களை நீக்கியதன் மூலம், இந்த செய்தியினை தலைப்புச் செய்தியாக மாற்றியிருக்கிறார்.  இப்படி செய்யவும் காரணமிருக்கிறது. சமச்சீர் கல்வியை அமல் படுத்தவேண்டும் என்று நீதிமன்றம்  சொன்னபிறகே  ஜெயா அரசு சமச்சீர் கல்வியை அமல் படுத்தியது.

இப்போது அண்ணா நூலக மாற்றத்திற்கும்  நீதி மன்றம் தடை உத்திரவு போட்டிருக்கிறது. இப்படி தமிழக அரசே இப்போது நீதி மன்றத்தால்தான்  நடத்தப்படுகிறது என்னும் அளவிற்கு தமிழக அரசின் தலையில் அவ்வப்போது குட்டி,  நல் வழியில் செல்ல உத்திரவு இடுகிறது நீதிமன்றம்.

இல்லையென்றால் ஏன் இந்த அறிபறியில் ஆறு அமைச்சர்களை நீக்க வேண்டும்.  நீக்குவதற்கு ஆயிரம் காரணம் இருந்தாலும், அதை செய்ய இது நேரம் அல்லவே....?

ஒரு பிரச்சனையின் தீவிரத்தை குறைக்க மற்றொரு பிரச்சனையை கிளப்பியுள்ளார் ஜெயலலிதா. 

இது புத்திசாலித்தனமா....? இல்லை புத்தி பிசகியத்தனமா....?

"நூலகத்தை மூடு...டாஸ்மாக்கை திற"


ஜெ அரசின் கொள்கை

'ஒரு பக்கம் நூலகங்களை மூடும் ஜெயலலிதா மறுபக்கம், தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறக்கிறார்.'


'ரோம் நகரம் தீ பிடித்து எரிந்துக் கொண்டு இருந்த போது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தானாம்.'   அப்படி இருக்கிறது ஜெயலலிதாவின் செயல். 
 
தமிழகமே தொடர் மழையால் தத்தளித்துக் கொண்டு இருக்க...இவர் அரசு இயந்திரத்தை முடுக்கி நிவாரண உதவிகளை செய்யாமல், வீன் வேலைகளில் கவனம் செலுத்தி தமிழக  மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். .

"விதை ஒன்னு போட்டா, சொர ஒன்னா முளைக்கும்?"  என்று கிராமத்தில் கேட்பார்கள்.  மனதில் துவேஷமும், பழி தீர்க்கும் உணர்ச்சியும் இருப்பவர்களால் இதற்கு மேல் நல்ல ரிசல்ட்டை தர முடியாது. 

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா, முதலில் செய்த  காரியம் 'செம்மொழி நூலகத்தை' செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து தூக்கி வீசியது.  

மூவாயிரம் வருடம் தாண்டி இன்றும் பேச்சு மொழியாக இருக்கக் கூடிய மொழி செம் மொழியாகும். ( படிக்க:  செம்மொழி என்றால் என்ன ? கவிக்கோ அப்துல் ரஹ்மான்)  அந்த வகையில் அன்றையை முதல்வர் கருணாநிதி கோவையில் செம்மொழி மாநாட்டை கூட்டினார்.   மொழிக்காக ஒரு மாநாடா என  உலகினோர் வியக்கும் அளவிற்கு அம் மாநாடு நடைபெற்றது.

மாநாடு நடத்தினால் மட்டும் போதாது, அதற்காக ஒரு நூலகத்தை பிரத்யேகமாக அமைக்க வேண்டும், என்ற உயரிய என்னத்தில்தான் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் 'செம்மொழி நூலகத்தை' சிறப்புடன் அமைத்தார் கருணாநிதி.  கோட்டையில் சட்டபேரவை வளாகத்தில் அழகுடன் அமைக்கப்பட்டது அன் நூலகம்.

வந்தார் மகராசி. முதல் வேலையாக அந்த செம்மொழி நூலகத்தை தூக்கிக் கடாசினார்.  இன்று அந்த  அரிய வகை நூல்கள் டிபிஐயில் மூலைக்கொன்றாய் குவித்து வைக்கப் பட்டுள்ளன.


அடுத்த கை அரிப்புக்கு இதோ இப்போ 'அண்ணா நூற்றாண்டு  நினைவு நூலகம்'.  

சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 180 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 'அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்' திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தினால்  இன்று மருத்துவமனையாக மாற்ற உத்திரவிட்டுள்ளார் ஜெயலலிதா. பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.


ஒரு பக்கம் நூலகங்களை மூடும் ஜெயலலிதா மறுபக்கம், தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறக்கிறார். குடிக்க வழி செய்து  தமிழர்களை குடிக்கு அடிமையாக்குகிறார்.  (படிக்க: குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்)  தமிழர்கள் படிக்க வழியில்லாமல், குடிக்கு அடிமையாகி அறிவு வளர்ச்சியின்றி முடங்கி போக வேண்டும் என்று நினைக்கின்றாரோ  என்னவோ தெரியவில்லை?. 

ஆட்சிக்கு வந்த உடனே....புதிய சட்டசபை வளாகத்தை பொது மருத்துவமனையாக மாற்றப்படும் என்றார்.  இது நாள் வரையில் ஒரு சிறு வேலைகூட அங்கு தொடங்கவில்லை. ஆட்சிக்கு வந்த இந்த 7 மாதத்தில்,  தமிழகத்தில் ஒரு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான ஒன்று. 

சிலருக்கு படித்தவர்களையும் பிடிக்காது. படிப்பவர்களையும் பிடிக்காது. ஏன்னா... படிச்சு அறிவு வளர்ந்திடுச்சின்னா, ஒரு அடிமையும் முதுகு வளைய நமஸ்காரம் பன்ன மாட்டானே...?  அப்புறம், பொழப்பு நாறிடுமே.... என்ன செய்வது என்று நினைக்கின்றார்களோ என்னவோ.....?

காழ்புணர்ச்சியாலும் பழி வாங்கும் என்னத்தாலும் ஜெயலலிதா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அவருக்கு எதிராகத்தான் முடியும் என்பது சமச்சீர் குளறுபடியின்போதே நாம் புரிந்துக் கொண்ட ஒன்று. நீதிமன்றம் அவர் தலையில் தட்டிய ஒன்று!.


வியாழன், நவம்பர் 03, 2011

'அதிகார போதையும் தவறான பாதையும்'


அண்ணா நூற்றாண்டு நூலகம்


"தேவையான உள்கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட ஒரு நூலகத்தை மாற்ற வேண்டியது இல்லை"


அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது ஜெயலலிதாவின் இந்த அதிரடி உத்திரவு. ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகத்தை இப்படி குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் முடிவு யாரும் எதிர்பாராத ஒன்று. 
கருணாநிதி அரசு செய்த நல்ல திட்டத்தை,ஜெயலலிதா இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மாற்றுவது,அவருக்கு வாக்களித்த மக்களுக்கு
 இழைக்கப்படும் துரோகம்.


சென்னை கோட்டூர்புரத்தில், 8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. 

பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எனும் சிறப்புகொண்ட இந்த அண்ணா நூலகத்தை விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Pediatric Hospital) மாற்றி அமைக்கப்படும்” என இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 1.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.  அதிகார போதையால் ஜெயலலிதா செய்யும் தவறுகள்,  நிச்சயம் அவருக்கு மக்கள் மன்றத்தில்  சரிவைத்தான் ஏற்படுத்தும்.  



மிழகத்தின் பெரிய அரசாங்க மருத்துமனைகளிலும் குழந்தைகளுக்கு தேவைப்படும் அவசியமான மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது . குறிப்பாக குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் chemotherapy drugs க்கு , பலநேரங்களில் shortage இருக்கும்.  சிகிச்சையின்போது ஏற்படும் vomiting , secondary infections controll பண்ண தேவைப்படும் higher antibiotics ஆகியவற்றிக்கு வெளியேவுள்ள தனியார் மருந்துக்கடையில்தான் drugs வாங்கவேண்டியிருக்கும் . இந்தநிலைமையில் இருக்கும் அரசுமருத்துமனைகளின் தரத்தை இதுவரை உயர்த்தியதாக தெரியவில்லை , இவர்கள்தான் குழந்தைகளின் நலனுக்காக நூலகத்தை அரசுமருத்துவமனையாக்க முயற்சிக்கிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகளுக்கு தேவைப்படும் அடிப்படை மருந்துகள்கூட கிடையாது , தமிழக அரசாங்கம் குழந்தைகளின் மருத்துவ நலனில் காட்டும் அக்கறை மிகவும் மோசமானது ... மருத்துவனை விரிவாக்கம் கண்டிப்பாக தேவைப்படும் சூழல்தான் இது , ஆனால் அதை நூலகத்தை மாற்றித்தான் செய்வேன் என்பது மிகவும் கீழ்த்தரமானது. Source  Facebook .


குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை  எழுப்ப முடியும். 

அதற்காக தேவையான உள்கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட ஒரு நூலகத்தை மாற்ற வேண்டியது இல்லை. மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போது அமைந்திருக்கும் இடம், அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை.  இதிலேயே மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வலுப்படுத்தவும் முடியும்.

ஆகவே, ஜெயா அரசு தனது அமைச்சரவை முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே தமிழக மக்களின் தற்போதைய கோரிக்கை. 

மனம் மாறுவாரா ஜெயலலிதா....?


கடைசி செய்தி: 

முன்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த செம்மொழி நூலகத்தை மாற்றினார். இப்போது ஆசியாவின் இரண்டாவது நூலகமான அண்ணா நூலகத்தை மாற்றியிருக்கிறார்.  

ஜெயலலிதாவிற்கு நூலகமென்றாலே பிடிக்காதா....?

செவ்வாய், நவம்பர் 01, 2011

மழைக் காலமும் சில மீன் பிடி நினைவுகளும்!


திருவாலங்காடு காவிரி ஆறு

    மழைக்காலம் வந்துவிட்டாலே  ரம்மியமான நினைவுகளும் நமக்கு வந்துவிடும். அதுவும், கிராமம் சார்ந்த நினைவுகள் என்றால் கேட்கவே வேண்டாம். மனம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்து அந்த நிகழ் காலதிற்கே சென்றுவிடும். வாழைப் பழம்  பிடிக்காத குரங்கும் மழைக்காலம் பிடிக்காத மனிதனும்  இருக்க முடியுமா....?
     

மழைக்காலம் தொடர்பான  எனது சிறுவயது நினைவுகள் இன்றும் பசுமையாக அப்படியே உள்ளது.

எங்கள் ஊர் காவிரி ஆற்றின் கடைமடை பாசனப்பகுதி(கும்பகோணம்- மயிலாடுதுறை) என்பதால் 90 சதவீதம் விவசாய நிலங்கள்தான்.  மழைக்காலம் என்றால் போதும், இரு கரை தொட்டு தளும்பி செல்லுவாள் காவிரி அன்னை. 
      

'நெல்லுக்கு இறைத்த நீர்  -வாய்க்கால்
வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்'

ஆறு நிறைந்து, வாய்க்கால் நிறைந்து, வயல் நிறைந்து... கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீர் பாய்விரித்து படுத்திருக்கும். சிலுசிலுக்கும் காற்றில் நீர் திவாளைகள் முகத்தில் பட்டுத் தெரிக்கும்.  செஞ்சாந்தாய் சுழித்து ஓடும் நீரில் கயல்களும் சாரைகளும் வளைந்து நெளிந்து,  நீரில்  நீர் கோலமிடும்.   காற்றில் எழும்பும் சிறு அலையில் நீரில் மறைந்திருக்கும் பால்கட்டிய நெல் கதிர்கள் நாங்கள் இங்குதான் இருக்கிறோம் என்று மெல்ல தலை அசைக்கும்.  அடடா...கம்பன் பிறந்த ஊர் கூப்பிடும் தூரத்தில்தான், என்பதை நீங்கள் மறந்து விடவேண்டாம். 

அந்த கவின்மிகுக் காட்சிகள் என்றைக்கும் நம் நெஞ்சை விட்டு அகலாது.

வயல் வெளிகள் எங்கும் ஆற்று நீர் நிறைந்திருப்பதால், மீன்கள்;  மான்கள் போல்  வாய்கால்களில் துள்ளிக் குதிக்கும்.  அந்த புதுவரவு மீன்களை  பிடிக்க சில நூதன உத்திகளை பயன்படுத்துவார்கள் கிராமத்தினர்.
              
    
'சாறுமடை'

வாய்கால்களில்  குறுகிய இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் 'சாறுமடை' அமைப்பார்கள்.  அதாவது பனைமரத்தின் கூடாக இருக்கும் சிறு த(து)ண்டை எடுத்து  (நடு மரம்),   அதில் ஒரு பக்கத்தில் சிறு சிறு துளைகளை போடுவார்கள். மரத்தின் மறு பக்கத்தில் 'ப' வடிவில் வெட்டி விடுவார்கள்.  இந்த மரத்துண்டை  வாய்க்காலின் நடுவில் வைத்து நீரை தடுப்பார்கள். இப்படிச் செய்து ஒரு செயற்கையான  சிறு அணையை உருவாக்குவார்கள். இரு பக்கத்திலும் சிறு பானையை அணையின் இரு ஓரத்திலும் பதித்து விடுவார்கள். அப்படி பானையை வைக்கும் போது, நீர் வழியும் பக்கத்தில் கொஞ்சம் சரிவாக இருக்கும்படி அமைப்பார்கள். 

இப்போது நீர் பனை மரத்தின் சிறு சிறு துவாரங்கள் வழியாக சட சட வென்று  வெளியேறும்.  அந்த சத்தம் மீன்களை ஈர்க்கும்.  இயற்கையான விதியின் படி மீன்கள் எப்போதும்  சட சடவென்று நீர் வரும் வழியில் ஏறும் அல்லது துள்ளிக் குதிக்கும்.  இப்படி துள்ளிக் குதிக்கும் மீன்கள், அந்த பனை மரத்தண்டின்  இரு புறங்களில்  பதித்து வைத்திருக்கும் பானைகளில் விழுந்து விடும். பானையில் விழுந்த மீன்களால் துள்ளி வெளியே வர முடியாது.

  இந்த சாறுமடையை இரவினில்தான் அமைப்பார்கள். அப்போதுதான் மீன்கள் நன்றாக பாயும்.   விடியற் காலையில் வந்து,  இரு பானைகளில் விழுந்திருக்கும் மீன்களை சேகரித்துக் கொள்வர்கள்.  இரண்டு மூன்று வீடுகளுக்கு தேவையான மீன்கள் இந்த சாறுமடை மூலம் கிடைத்துவிடும்.

'ஊத்தா'

ஊத்தா.  இது மூங்கிலால் ஆனது. ஒரு பக்கம் வாய் அகன்றும் மறு பக்கம் குறுகியும் இருக்கும்.  மூங்கில் குச்சிகளால் சிறு இடைவெளிவிட்டு கயிறுகளால் பின்னப்பட்டிருக்கும். ஊத்தா மீன் பிடிக்கப் பயன்படாத நாட்களில், கோழி அடைக்க பயன்படும்.  சில ஊர்களில் பஞ்சாரம் என்று அழைக்கிறார்கள்.


       து கொஞ்சம் வேடிக்கையானது.  சாணி உருண்டைகளை  உருட்டி, அதில் வறுத்த அரிசிகளை  (பொறி அரிசி) தூவிவிடுவார்கள்.  இதை வீட்டிலேயே தயார் செய்துக் கொண்டுவிடுவார்கள்.   பின்னர் நீர் நிலைகளில் மீன்கள் அதிகம் இருக்கும் இடமாகப்பார்த்து தண்ணீல் ஆங்காங்கே வைத்துவிடுவார்கள். அந்த சாணி உருண்டையின் மீது ஒரு கோரையையும் சொருகி விடுவார்கள். 

மீன்கள் வந்து அரிசிகளை தின்ன ஆரம்பித்ததும், அந்த கோரைகள் அசையத் தொடங்கும்.  பின்னர் ஊத்தாவைக் கொண்டு அடிமேல் அடிவைத்து அந்த வாய் அகலாமான ஊத்தாவை சளக்கென்று  தண்ணீரில் கவிழ்ப்பார்கள். இப்போது அந்த உருண்டையை மொய்த்துக் கொண்டு இருந்த  மீன்கள்  ஊத்தாவிற்குள் வந்துவிடும். பிறகென்ன ஊத்தாவிற்குள் கையைவிட்டு மீன்களை பிடித்துவிடுவார்கள்.  கெண்டை, கெளுத்தி, குரவை, செனல், வாளை என்று ரகத்திற்கு ஒன்றாய் கைகளுக்குள் அடைக்கலம் புகும். மற்ற நேரங்களில்

மழை சிறு தூரலாக  பெய்யும் நேரத்தில், காற்று குளிரோடு நம்மை தழுவிக் கொண்டு இருக்கும். அந்த நேரத்தில் கமகமக்கும் மீன் குழம்பும், ஆவி பறக்கும் சுடு சோற்றின் ருசியை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமென்பதில்லை?!.


வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...